கடகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப விஷயத்தை பிறரிடம் தயவுசெய்து சொல்ல வேண்டாம். குடும்பத்தினரிடம் கொஞ்சம் ஆலோசனை செய்து முக்கிய பணியை மேற்கொள்ளுங்கள். நண்பர்களால் மன கஷ்டங்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் இருக்கின்ற அனுகூலத்தை பாதுகாக்கவும். வீட்டு செலவிற்காக பணத் தேவைகளும் அதிகரிக்கும். பிராணிகளிடமிருந்து கொஞ்சம் விலகியே இருங்கள். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும்.
வேலை பளுவை குறைத்துக் கொள்ள இயலாது. உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் சுமாராகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலைதான் காணப்படும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மூத்த சகோதரர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். இன்று கூடுமானவரை உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பை கொடுக்கும். இன்று மாணவச் செல்வங்களும், பொதுமக்களும் எந்த ஒரு காரணத்திற்காகவும் தயவு செய்து இன்று வெளியே செல்ல வேண்டாம்.
காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வைரஸ் தொற்றின் காரணமாக நாம் வெளியில் செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. வைரஸ் தொற்றின் காரணமாக அரசாங்கம் நமக்கு சொல்லக் கூடிய அனைத்து விஷயங்களையும் நீங்கள் அலட்சியம் காட்டாமல் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற நாடுகளுடைய அதிக அளவு உயிரிழப்பிற்கு காரணமே, அவர்கள் காட்டிய அலட்சியப் போக்கு தான். அந்த அலட்சிய போக்கை நாம் இங்கே காட்டாமல் அந்த வைரஸ் தொற்றை முற்றிலுமாக ஒழிப்பதற்கு, பொதுமக்களாகிய நாம் கடைபிடிக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்