கடகம் ராசி அன்பர்களே..! இன்று ஓரளவு சுமாரான நாடாகத்தான் இருக்கும். கல்வியில் தேர்ச்சி பெற மாணவர்கள் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும், கவனமாகவே செயல்பட வேண்டியிருக்கும். கடின உழைப்பால் தொழில் விருத்தி காணலாம். கௌரவ குறைவு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வது ரொம்ப சிறப்பு. இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் ஓரளவு நீங்கும். சகஜமான நிலை காணப்படும்.
கணவன்-மனைவிக்கு இடையே இருந்த மனவருத்தங்கள் கூட ஓரளவு நீங்கும். பிள்ளைகளின் மூலம் ஓரளவு மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஓரளவு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்