Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு.. குழப்பம் உண்டாகும்.. அளவான பணவரவு கிடைக்கும்..!!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் இனம் புரியாத குழப்பம் கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இடையூறை சரிசெய்வது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம் பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையினை அடையக்கூடும்.

தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் பாராட்டுதல்கள் ஒரு சாபத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை கூடும். அதேபோல நல்ல மதிப்பெண்களையும் அவர்கள் எடுக்கக்கூடும் இருந்தாலும் கொஞ்சம் கடுமையாக உழைத்து முயற்சிகளைச் செய்யுங்கள் நல்ல வெற்றியை பெறலாம்.

இன்று முக்கியமான பணியை நாம் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு சென்றால் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |