Categories
ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு..சாதிக்க தோன்றும்.. எண்ணங்கள் மேலோங்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். சிந்தனை திறன் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். வீண் செலவுகள் அவ்வப்போது வந்து செல்லும். சில அதிரடியான முடிவுகளால் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். கடமை உணர்வுடன் இன்று செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளால் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். இன்றையநாள் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். முயற்சிகள் பலிக்கும் நாளாகத்தான் இன்று இருக்கும். கடன் பிரச்சினைகளில் இருந்து முழுமையாகவே விடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |