Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு… தகுதி திறமையை வளர்த்து கொள்வீர்கள்.. குடும்ப தேவையா பூர்த்தி செய்வீர்கள்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய தகுதி திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி ஓரளவு சிறப்பை கொடுக்கும். தாராள பணவரவு உங்களுக்கு கிடைக்கும். மனைவி கேட்ட பொருளை வாங்கி கொடுப்பீர்கள். குடும்பத்த்தின்  தேவையை இன்று நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். நண்பரிடம் எதிர்பார்க்கும் உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும். எதிர்நீச்சல் போட்டாவது நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள்.

பொருளாதார நிலை ஓரளவு ஏற்ற இறக்கமாக இருந்தாலும், குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். பிள்ளைகளைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது ரொம்ப நல்லது. பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். உறவினர் நண்பர்களிடம் கோபம் இல்லாமல் பேசுங்கள் அது போதும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து வந்து ரொம்ப நல்லது, கருநீல நிறம் உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்டநிறம்: கருநீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |