Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…தந்திரங்களை கற்று கொள்வீர்கள்..பண வசதிகள் கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று கம்பீரமாக பேசி சில காரியங்களை நல்லபடியாகவே முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களுடைய வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இன்று  எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும், குழந்தைகள் உயர்கல்வி கற்க பண வசதிகள் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

கவனத்தில் கொள்ளுங்கள், யாரிடமும் எந்தவித கோபமும் இல்லாமல் பேசுங்கள். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவே நடந்து கொள்ளுங்கள். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். உங்களுடைய மனதை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அது போலவே தேர்வு முடியும் வரை உணவு பழக்கவழக்கங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அதாவது காரமான உணவுகளை மட்டும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள், பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், இரவு தூங்க செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டு செல்லுங்கள். படித்த பாடம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லக்கூடிய அளவில் இருக்கும்.அதுமட்டுமில்லாமல் ஆரஞ்சுநிறம்உங்களுக்கு ஒரு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னை தானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |