கடகம் ராசி அன்பர்களே..! இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாகவே இருக்கும். திடீரென்று முன்னேற்றம் உருவாகும். கொடுக்கல், வாங்கல்களில் நீங்கள் கொஞ்சம் ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வரவேண்டும். பயணம் மகிழ்ச்சி கூடியதாகவே அமையும். சொத்துக்களால் உங்களுக்கு லாபம் ஏற்படும். இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் பெரிதாகவே பேசுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே நிதானமான போக்கு ஏற்பட வேண்டும், அவரிடம் எந்தவித வாக்குவாதமும் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள்.
பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவது ரொம்ப நல்லது. பள்ளிக்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று வெற்றி வாய்ப்புகள் வந்துசேரும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இரண்டு நிமிடம் தியானம் இருந்து பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது. பழவகைகளையும், பால் உணவுகளையும் உண்டு மகிழ்வது ரொம்ப நல்லது. இதனால் உங்கள் மனம் கொஞ்சம் அமைதியாகவே இருக்கும். கூடுமானவரை காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே அவர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து உங்களுக்கான கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்