கடகம் ராசி அன்பர்களே..! இன்று நந்தீஸ்வரர் வழிபாட்டினால் நலம் காண வேண்டிய நாளாகவே இருக்கும். தொட்டது துலங்கும், தனவரவு தாராளமாக இருக்கும். பேச்சில் கனிவு பிறக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவினால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.
அரசியல் வாதிகளுக்கு கௌரவமான பதவிகள் தேடி வரக்கூடும். இன்று ஓரளவு தொட்டது துலங்கும். நினைத்த காரியம் நல்லபடியாகவே நடக்கும். காதலர்களுக்கு இன்று வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும்.இன்று சுபகாரியப் பேச்சுகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். அதேபோல கொடுக்கல் வாங்கலும் நல்லபடியாகவே முடியும். பழைய கடன்கள் அடைபடும்.
இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம் மஞ்சள் நிறம்