Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு..நல்லோரின் நட்பு கிடைக்கும்.. பணவரவு நன்மையை கொடுக்கும்..!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்கள் பேச்சில் மங்கள தன்மை நிறைந்திருக்கும், நல்லோரின் நட்பும் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க நவீன மாற்றங்கள் செய்வீர்கள். பணவரவும் நன்மையை கொடுக்கும். பணியாளர்களுக்கு நிர்வாகத்தினரிடம் பரிசு பாராட்டுக்கள், போன்றவை கிடைக்கப் பெறுவீர்கள். இன்று வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்கள் போன்றவை தவிர்ப்பது நல்லது.

எந்த ஒரு செயலையும் அலட்சியம் காட்டாமல் செய்வது ரொம்ப நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக கொஞ்சம் பாடுபட வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு கல்வியும் பற்றிய பயம் கொஞ்சம் இருக்கும், கவலைப்படாதீர்கள். தேர்வை தைரியமாக எழுதுங்கள் சந்தோசமாக இருங்கள். எந்த பிரச்சனையும் இல்லை, அது மட்டுமில்லை தேர்வு முடியும் வரை உணவில் கொஞ்சம் கட்டுப்பாடு உடனிருந்து வேண்டும். உங்களுடைய மனதையும் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிற உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். இன்று  சிவபெருமான் வழிபாட்டையும் சேர்த்து வழிபட்டு உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள்

Categories

Tech |