Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு..பதவி உயர்வுகள் கிடைக்கும்.. எதிர்பார்த்த மாற்றங்கள் நடக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று புதிய உத்தியோக வாய்ப்புகள் பதவி உயர்வுகள் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். கல்வியில் முன்னேற்றமும் சிறப்பாகவே இருக்கும். வாழ்க்கையில் இனிய மாற்றங்கள் எதிர்பார்க்கக் கூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச் சுமையும், வீண் அலைச்சலும் கொஞ்சம் இருக்கும். கவலை வேண்டாம். கவனமாகவே சில வேலைகளை மேற்கொள்வது ரொம்ப நல்லது. இன்று மேலதிகாரிகளின் அதிருப்திக்கு மட்டும் ஆளாகக்கூடும், பார்த்துக்கொள்ளுங்கள்.

கவனமாக செயல்படுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் கொஞ்சம் உருவாகலாம். கவனம் இருக்கட்டும் இன்று பேச்சில் மட்டும் கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள். பஞ்சாயத்துகளில் தயவுசெய்து தலையிட வேண்டாம். வாக்குறுதிகளும் யாருக்கும் கொடுக்க வேண்டாம். இன்று பணப்பரிவர்த்தனையில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். மற்றவர்களின் பொறுப்புகளை தயவு செய்து நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.

இந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள் பயணங்கள் ஓரளவு லாபத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். ஆனால் வீண் அலைச்சலை முற்றிலும் நீங்கள் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள் வாகனத்தில் செல்லும் பொழுது கூட கொஞ்சம் பொறுமையாகவே செல்லுங்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லாவிட்டாலும் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள்.

பாடங்களை தெளிவாக படியுங்கள் படித்ததை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்:-3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |