கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். வெளியூரிலிருந்து நல்ல தகவலும் இன்று வந்து சேரும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர்கள் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனை கொடுக்கும். வியாபாரப் போட்டிகள் குறையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமை குறைந்து மன நிம்மதியும் அடைவார்கள். இன்றைய நாள் ஓரளவு அதிர்ஷ்டம் பொங்கும் நாள் என்று சொல்லலாம். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். அனைத்து காரியங்களும் வெற்றி கொடுப்பதாகவே இருக்கும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். நல்ல பலன்களை அவர்கள் இன்று அடையக்கூடும். இருந்தாலும் தேர்வு முடியும் வரை உணவு பழக்கவழக்கங்களில் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுங்கள், அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்