கடக ராசி அன்பர்களே…!! இன்று இஷ்ட தெய்வ அருளால் சில நன்மைகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை கொடுக்கும். வேடிக்கை வினோதங்கள் கண்டுகளிக்கும் சூழ்நிலை ஏற்படும்.
சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். இன்றைய நாள் ஒரு சிறப்பான நாளாகவே இருக்கும். இருந்தாலும் ஆலயம் சென்று வாருங்கள் உங்களுக்கான அனைத்து விஷயங்களும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். அதேபோல் மேல் கல்விக்காக முயற்சிகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அனைவரின் ஒத்துழைப்போடும் காதலர்கள் இன்று திருமணத்திற்கான பேச்சுவார்த்தையும் நடத்துவீர்கள்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். செல்வச் செழிப்பு ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சாம்பல் நிறம்