Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு … ஆர்வம் அதிகரிக்கும் …கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் …!!

கடகம் ராசி அன்பர்களே …! இன்று முன்னேற்றம் கூடும் நாளாக இருக்கும்.  முக்கிய புள்ளிகள்  சந்திப்பால் முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். கடல் பயண வாய்ப்புகள் கைகொடுக்கும்.  இன்று அழகு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  தொட்ட காரியம் வெற்றி பெறும்.  தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.  கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள்.  பொதுநல ஈடுபாட்டுடன் காரியங்களை சிறப்பாகவே செய்வீர்கள்.

வருமானம் திருப்திகரமாக இருக்கும்.  குடும்ப கஷ்டங்கள் நீங்கும்.  தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.  யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாகவே செயலாற்றுவீர்கள்.  தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். இன்று எடுக்கும் முயற்சியில் வெற்றி இருக்கும்.  ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.  மற்றவர்களுக்கு உதவி புரிவதில் இன்று வல்லவர்களாக நீங்கள் திகழ்வீர்கள்.

இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும்.  அதுமட்டுமல்லாமல்  இன்று இல்லத்தில் சிவ பெருமான் வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளுங்கள்.  காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை மற்றும்  நீல நிறம்

Categories

Tech |