கடக ராசி அன்பர்களே..!! இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் மாற்றம் செய்யலாமா என்னும் சிந்தனை மேலோங்கும். குடும்ப பெரியவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. இன்று குடும்பத்தில் சுகம் ஏற்படும் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும் கணவன் மனைவிக்கு இடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும் அடுத்தவர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள்.
பயணங்கள் சாதகமான பலனைக் கொடுக்கும் பொறுப்புகள் கூடும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும் சுதந்திரமான எண்ணம் ஏற்படும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் வெற்றிமேல் வெற்றி வந்து குவியும். அதுமட்டுமில்லாமல் சக மாணவரின் ஒத்துழைப்பும் முழுமையாக கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள. ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் மஞ்சள்