Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… தாயின் ஆறுதல் கிடைக்கும்…மனதில் நம்பிக்கை பிறக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே…!  இன்று உங்களுடைய நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது.  வாகனத்தில் செல்லும் பொழுது விவேகத்துடன் செல்லுங்கள்.  தாயின் ஆறுதல் மனதில் நம்பிக்கையை உருவாக்கும்.  சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்லலாமா என்ற சிந்தனை மேலோங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும்.

வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத் தக்க தருணமாக இன்றைய நாள் இருக்கும்.  இருந்தாலும் கொஞ்சம் பொறுமையாக யோசித்து செய்யுங்கள் குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள.  கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது எப்பொழுதுமே நல்லது.  அவரிடம் எப்போதும் அன்பை செலுத்துங்கள்.  உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.  அதுபோலவே இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும் இந்த வருடம் முழுவதும் நீங்கள் ஒரு சாதகமாகவே காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்டமான திசை :  வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பிங்க் நிறம்

Categories

Tech |