கடக ராசி அன்பர்கள்…!!இன்று நீங்கள் பிறருக்காக எந்த ஒரு பொறுப்பையும் தயவுசெய்து ஏற்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் சிரமங்களை திறமையுடன் தான் சரி செய்வீர்கள். இன்று சுமாரான பணவரவு தான் இருக்கும். வாகனத்தில் மித வேகத்தை கடைப்பிடிக்க வேண்டும். இன்று நல்லது கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படும் திறமையும் இருக்கும். எந்த ஒரு வேலையும் வேகமாகவும் விவேகமாகவும் செய்யும் திறன் ஏற்படும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும் துணிச்சலுடன் சில முக்கியமான பணியையும் எதிர்கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும். சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவீர்கள். நினைத்ததையும் முடித்துக் காட்டுவீர்கள் .அதுபோன்றே வெளியூர் பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். புதிதாக காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கிறது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு
அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்