Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு … மனத்தெளிவு உண்டாகும் … ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும் …!!!

கடகம் ராசி அன்பர்களே …!  இன்று தொழிலில் எதிர்பார்த்த லாபம் இல்லாமல் வரவேண்டிய பணம் முடங்கி கொஞ்சம் சிரமத்தை ஏற்படுத்தும்.  இன்று முன்னேற்றத் தடைகள் கொஞ்சம் ஏற்படும்.  சமாளிக்க முடியாத செலவுகள் கூட இருக்கும்.  எப்படியும் உங்களுடைய சாமர்த்தியத்தால் அனைத்து விஷயத்தையும் சரிகட்டி விடுவீர்கள்.  பயணங்கள் செல்வதாக இருக்கும்பொழுது ரொம்ப கவனம் இருக்கட்டும்.  அதனால் ஓரளவு நன்மையும் ஏற்படும்.  நண்பர்கள் பலவிதங்களிலும் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.

மனத்தெளிவு உண்டாகும்.  ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும்.  தொழில் வியாபாரத்திலிருந்த இடையூறுகள் குறையும்.  கடித போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும்.  இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து மட்டும்  செய்யுங்கள் அது போதும்.  இன்று இறை வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக இருக்கும்.  மனதை கொஞ்சம் நிதானமாகவும் பொறுமையாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.  தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது.

தேவையில்லாத விஷயத்திற்காக தயவுசெய்து குழப்பமடைய வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள்.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு.  வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும்.  அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரியபகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண்  :  4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்  : வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறம்

Categories

Tech |