Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட ஸ்டூடியோ உரிமையாளர்…. போலீசை அலைக்கழித்த கும்பல்…. விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்…!!

சென்னை சாலிகிராமம் அருகில் ஸ்டுடியோ உரிமையாளரை கடத்தி சென்ற கும்பலிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் நியூட்டன் இவர் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் ஆவர். இவர் கொரோனா காலத்தில் அதை மூடிவிட்டு திரைத்துறையில் கிராபிக்ஸ் பணி செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் திருமுல்லைவாயிலில் பிரதான பொருள்களை விற்கும் கடையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த 19ஆம் தேதி வழக்கம் போல திருமுல்லைவாயில் புறப்பட்டு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை இதுகுறித்து அவரது மனைவி கவுசல்யா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் 19 ஆம் தேதி புகார் அளித்தார்.

அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  அன்றிரவு நியூட்டன் அவரது மாமனாரை தொடர்பு கொண்டு தன்னை கடத்தி வைத்திருப்பதாகவும், 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் விட்டு விடுவார்கள் என கூறி செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அசோக்நகர் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் நந்தினி தலைமையில் தனிப்படை அமைத்து நியூட்டனின் செல்போன் சிக்னலை வைத்து பின் தொடர்ந்து வந்தனர்.

அதனை அடுத்து 20ஆம் தேதி நியூட்டனின் மாமனாருக்கு மறுபடியும் கடத்தல் கும்பல் அழைப்பு விடுத்து குறிப்பிட்ட பகுதியில் பணத்தை கொண்டு வரவேண்டும் என்றும் இல்லையென்றால் நியூட்டனை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளனர்.இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் பணம் கொடுக்கப் போவது போல இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

ஆனால் அந்த கடத்தல் கும்பல் தங்களை காவல்துறையினர் பின்தொடர்வது தெரிந்து கொண்டு பல இடங்களுக்கு வேண்டுமென்றே அவர்களை அலைக்கழித்தனர். வெகு நேரம் கழித்து பட்டாபிராம் பகுதியில் பணத்தை வாங்க  அந்த கடத்தல் கும்பலில் இருவரான கௌதம் மற்றும் சுனில் ஆகிய இருவர் இருப்பது தெரிய வந்ததது. அவர்களை மடக்கி பிடிக்க முயன்ற காவல்துறையினர் அதில் ஒருவரை பிடித்தனர்.

மேலும் அங்கிருந்து தப்பிச் சென்ற சுனிலின் வீட்டை கண்டுபிடித்த காவல்துறையினர் அங்கு சென்று அவரது மனைவி மூலம் சுனிலை தொடர்புகொண்டு கொண்டனர். இத்தனை அறிந்து  சுனில் திருப்பதியில் இருப்பதாகவும் சென்னைக்கு வருவதாகவும் கூறி இணைப்பை துண்டித்து விட்டார். பிறகு சென்னையில் இருந்து புறப்பட்ட தனிப்படையினர் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்று கடத்தல் காரையும் மடக்கி பிடித்து அவர்களை கைது செய்தனர். பின்பு அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் உட்பட 21 பேரிடம் 57 லட்சம் ரூபாய் பணத்தை நியூட்டன் மற்றும் பெங்களூரை சேர்ந்த அவரது நண்பரான மேத்தியூ இருவரும் சேர்ந்து தங்களிடம் ரைஸ் புல்லிங் இருப்பதாக கூறி அதனை விற்று தங்களுக்கு இரு மடங்கு பணம் தருவதாக கூறி  அவர்களை ஏமாற்றி விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் நியூட்டனை கடத்தியுள்ளனர். இதனை கேட்ட காவல்துறையினர். அவர்கள் மீது கடத்தல் வழக்கும் மற்றும் ரைஸ் புல்லிங் மோசடியில் ஈடுபட்டுள்ளதால் நியூட்டன் மற்றும் அவரது நண்பர் ரகுஜி ஆகிய இருவரையும் மோசடி வழக்கில் கைது செய்தனர். ரைஸ் புல்லிங் முக்கிய குற்றவாளியான மேத்தியூ வை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |