சிறுமியுடன் பேசிக்கொண்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை பத்தாம் வகுப்பு மாணவர்கள் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் காசியாபாத்தியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுடன் கடந்த 28ஆம் தேதி பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை சந்திப்பதற்காக காரில் சென்றுள்ளார். அந்த சிறுமிகளுடன் மாணவன் பேசிக் கொண்டிருந்த சமயம் அப்பகுதிக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதே காரில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை கோவிந்தபுரம் வனப் பகுதிக்கு கடத்தி சென்றனர். அதோடு அங்கு மாணவனின் உடையை கழற்ற சொல்லி பெல்ட் மற்றும் குச்சி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
பின்னர் மாணவனின் வாயில் துணியால் கட்டியவர்கள் அவரது செல்போனில் இருந்த அனைத்து சமூக வலைதள கணக்குகளை முற்றிலுமாக முடக்கியதோடு அவரை கடத்தி வைத்திருப்பதாகவும் பதிவு செய்தனர். காணொளி வெளியானதால் அதை வைத்து காவல்துறையினர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு நான்கு சிறுவர்களையும் விசாரித்து வரும் காவல்துறையினர் மாணவியுடன் பேசியதால் மாணவன் கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.