விதவை பெண்ணை 4 வாலிபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 36 வயதுடைய விதவை பெண் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இவர் திருச்செங்கோட்டை சேர்ந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது இருவரும் வெளியே சென்று வருவது. வழக்கம் கடந்த 19-ஆம் தேதி வீராணம் ஏரி பகுதிக்கு சென்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற 4 வாலிபர்கள் பெண்ணை மிரட்டி 2000 ரூபாய் பணம் மற்றும் 1 1/4 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறித்தனர். மேலும் வாலிபர்கள் அந்தப் பெண்ணை கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அந்த பெண்ணின் நண்பனுடைய செல்போனில் வாலிபர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். இதனை வெளியில் சொன்னால் இருவரையும் கொன்று விடுவோம் என அந்த கும்பல் மிரட்டி விட்டு தப்பி சென்றது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாமக்கல் அழகு நகரைச் சேர்ந்த நவீன்குமார், கல்லூரி மாணவர் தினேஷ்குமார், முரளி வல்லரசு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.