பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தில் உள்ள பழைய சவுத் பகுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 4 முஸ்லிம் ஆண்களால் ஒரு இந்து சிறுமி கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் சந்தா என்ற சிறுமி வேலை செய்த உள்ளூர் மில்லில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ஷமன் மாக்சி மற்றும் மேலும் பல மூன்று பேரால் கடத்தப்பட்டுள்ளார். அதன் பின் பலுசிஸ்தானில் வைத்து ஆகஸ்ட் 30 அன்று சந்தா, ஷாமன் மாக்சியை கட்டாயமாக மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரின் திருமண சான்றிதழில் அந்த பெண்ணிற்கு 19 வயது என்பதை காட்டுகின்றது இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு பின் மைனர் சிறுமி அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு உள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. கோர்ட் சிறுமியை பெற்றோரிடம் செல்ல அனுமதிக்கவில்லை என்றும் அவர் மீண்டும் கடத்தப்பட்டவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து சமூக ஊடகங்களில் வைரலாக வரும் ஒரு வீடியோவில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் சந்தா தனது பெற்றோரை கட்டிப்பிடித்து அழுவதை காணலாம். பாகிஸ்தானின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 97 சதவீதம் பேர் இருக்கின்றனர். அதேசமயம் இந்துக்கள் இரண்டு சதவீதம் பேர் இருக்கின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் பெரும்பான்மையான வாழும் அண்டை நாடான இந்தியாவின் எல்லையில் உள்ள சிந்து மாகாணத்தில் வசித்து வருகின்றனர்.