முதலமைச்சர் மு க ஸ்டாலின், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்ட விழாவை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர்,” திமுக ஆட்சியானது விவசாயிகளுக்கான ஆட்சி ஆகும். இதனடிப்படையில் இலவச மின் இணைப்பிற்காக விண்ணப்பித்திருந்த 4.5 லட்சம் விவசாயிகளில் முதல்கட்டமாக தற்பொழுது ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக மின் இணைப்பு தர திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசானது 4 மாதத்தில் விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சம் மின் இணைப்புகள் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக அரசானது ஆட்சிக்கு வந்த 4 மாதத்திலேயே ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடந்த அதிமுக ஆட்சியானது சீரழித்து இருக்கிறது. இலவச மின் இணைப்பானது விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையிலேயே வழங்கப்படுகின்றது. தமிழக அரசுதான் இந்தியாவிலேயே மிக வேகமாக செயல்படும் அரசாகும். மேலும் மின்சார வாரியத்தை வளமையாக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் புதிய மின் இணைப்பை பெற்ற பின் தேவைக்கேற்ப சிக்கனமாக உபயோகிக்க வேண்டும்” என்று கூறினார்.