Categories
அரசியல்

கடந்த ஆட்சியில் அதிமுகவினர்…. விளம்பரம் மட்டுமே செய்தார்கள்…. செந்தில் பாலாஜி பொளேர்…!!!

அடுத்த மாதம் மார்ச் மாதத்திற்குல் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான்கு மாதங்களில் தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 905 மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் மின் கம்பங்கள் கையிருப்பில் உள்ளது. மேலும் பழுதடைந்த கம்பங்கள் மாற்றப்படும். வரும் மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படும்.

தமிழக அரசின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகளை கொடுக்க கூடிய சிறப்பான திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கியுள்ளார். அதன்படி சிறப்பாக ஒரு லட்சம் மின் இணைப்புகள் கொடுக்கப்படும். முந்தைய அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று அதிமுகவினர் விளம்பரம் மட்டுமே செய்துள்ளார் என்று விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |