அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் கொளந்தானூரில் நேற்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்திருப்பதை மேற்பார்வையிட்டார். இதன் பின்னர் குடியிருப்புகளில் இருந்து அப்புறப்படுத்தி பசுபதிபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “ஒரு நாளைக்கு தமிழகத்திற்கு 16 ஆயிரம் மெகாவாட் மின் தேவைப்படுகிறது. ஆனால் இதில் கடந்த ஆட்சியில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் 22% மட்டுமே. இதனால் தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்தும், தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி பயன்படுத்தினர். இதனை அடுத்து மின் உற்பத்திக்கு ஆகும் செலவைக் குறைத்து, தனியாரிடம் இருந்து விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது போன்றவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அனல் மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் அதன் கட்டமைப்பானது சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால் நிலக்கரியானது ஒடிசாவில் வாங்கப்பட்டு வருகிறது. மேலும் வாங்கி உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, அவ்விடத்திலேயே உற்பத்தி செய்த பின் வாங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பேசியுள்ளார்.