கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் பதிவான வழக்குகளின் விவரம் வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம்வரை 77 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 13 பாலியல் பலாத்கார வழக்குகள், 8 துன்புறுத்துதல் வழக்குகள், 132 பெண் வன்கொடுமை தடுப்பு வழக்குகள், 27 கொலை வழக்குகள், 5 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து 114 கஞ்சா வழக்குகள், 1594 புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வழக்குகள், 130 லாட்டரி விற்பனை வழக்குகள், 18 கலவர வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 59 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, 1872 சிசிடிவி கேமராக்கள் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.