Categories
தேசிய செய்திகள்

கடந்த ஆண்டு சாலை விபத்துகளில்… சுமார் 1.20 லட்சம் பேர் பலி… திடுக்கிட வைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!

2020ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் மட்டும் சுமார் 1.20 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த ஆண்டில் நடைபெற்ற குற்ற நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ஒரு நாளைக்கு சரியாக 328 பேர் இறந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ரயில் விபத்துகளால் 52 பேரும், மருத்துவ கவனக்குறைவால் 132 பேரும், உள்ளாட்சி அமைப்புகளின் அஜாக்கிரதையால் 51 பேரும், பலியாகியுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 3 லட்சத்து 92 ஆயிரம் பேர் விபத்துகளில் இறந்துள்ளனர் என புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. மேலும் கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |