கடந்த ஆண்டைப் போன்று மோசமான சூழ்நிலை தற்போது இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி.
இதைதொடர்ந்து கடந்த ஆண்டை போன்ற மோசமான சூழ்நிலை தற்போது இல்லை என்று அவர் கூறினார். இந்த வருடம் மாஸ்க் முதல் வென்டிலேட்டர் வரை மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.