உலக அளவில் வேற்று கிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டுகள் போன்றவை பற்றிய விவாதமும் தேடலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பறக்கும் தட்டுகள் பற்றிய ஆராய்ச்சியாளர் எஃப் பி ஐ யின் முன்னால் ஏஜென்ட் ஆன பெண் ஹாசன் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது இது பற்றி நியூ இயர் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, இதன்படி சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஹவாயியன் ஏர்லைன்ஸ் மற்றும் பலர் இந்த பகுதிகளில் பல்வேறு பறக்கும் பொருட்களை பார்த்திருக்கின்றார்கள். முன்னாள் ராணுவ விமானி ஒருவர் தனது விமானத்திற்கு மேலே பல விமானங்கள் பறந்து சென்றதை அவர் பார்த்திருக்கின்றார்.
இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் கடலோர பகுதியில் சார்ட்டட் ஜெட் விமானம் ஒன்றில் விமானி மார்க் ஹல்சி பறந்து செல்லும்போது கடந்த ஆகஸ்ட் பதினெட்டாம் தேதி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இருக்கின்றார். அவர்களிடம் எங்களை விட மிக அதிக உயரத்தில் சில விமானங்கள் எங்களுக்கு வடக்கே பறந்து செல்கின்றது அவர்கள் யாரென தெரிகிறதா என கேட்டிருக்கின்றார்கள். ஆனால் உறுதியாக எதுவும் தெரியவில்லை என பதில் வந்திருக்கிறது. இந்த நிலையில் 23 நிமிடங்களுக்கு பின் இதே போல் ஏழு விமானங்களை பார்த்தேன் என ஹல்சி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முதலில் மூன்று என இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் அடிவரை எங்களை விட உயரத்தில் பறந்து சென்றுள்ளனர்.
அவர்கள் வடிவமைத்தபடியே செல்கின்றார்கள் அவர்களை நான் பலமுறை வழிமறத்து சென்று பார்த்தேன் ஆனால் இது போல் ஒன்றை இதற்கு முன் நான் பார்த்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உரையாடல்கள் மற்றும் விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் பேச்சு பதிவுகளை பெண் ஹன்சன் தொகுத்து வழங்கி இருக்கின்றார் இதனை தொடர்ந்து ஹேன்சன் பேசும்போது வித்தியாசம் நிறைந்த ஒளி விளக்குகளை பார்த்தேன் என அந்த விமானி பேசியபோது 15 வெவ்வேறு வர்த்தக விமானங்களில் பயணம் மேற்கொண்ட விமானங்களும் தங்களுக்கு மேலே பறந்து சென்றவற்றை பற்றி தெரிவித்துள்ளனர். அவர்களின் ஆறு பேர் தங்களது பெயர்களை தைரியமுடன் பதிவு செய்திருக்கின்றனர் இதனை அடுத்து விசாரணை அமைப்புகள் கேட்டுக் கொண்டால் விமானிகள் அதன்படி எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.