இந்தியாவில் இந்த ஆண்டு தொடங்கி, கடந்த 2 மாதங்களில் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. அவற்றுள் சாம்சங், ஒன்பிளஸ், மோட்டோரோலா, ஜியோமி, ரியல்மி, ஒப்போ, விவோ, ஆசஸ் போன்ற நிறுவனங்கள் மிகவும் தரமிக்க ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், மக்களிடம் கடந்த 2 மாதங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
- ஆசுஸ் ROG போன் 5- 6.78 இன்ச் டிஸ்பிளே, Qualcomm Snapdragon 888 SoC, 18GB LPDDR5 ரேம், 512GB யு.எஃப்.எஸ் 3.1 ஸ்டோரேஜ், 6000mAh பேட்டரி, 30W சார்ஜர், ஆண்ட்ராய்டு 11 ஆகிய அம்சங்கள் கொண்ட இந்த போனின் விலை ரூ.79,999 ஆகும்.
-
சாம்சங் கேலக்ஸி எஸ் 21 FE 5ஜி – 6.4-inch AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃபெஷ் ரேட், Exynos 2100 SoC, டால்பி அட்மாஸ், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டெஸுக்கான IP68 சர்டிஃபிகேஷன் பெற்றது, ஒயர்லெஸ் சார்ஜிங். இந்த போனின் விலை ரூ.54,999 ஆகும்.
-
ஜியோமி 11i ஹைப்பர்சார்ஜ் 5ஜி- 120W ஃபாஸ்ட் சார்ஜிங், வெறும் 15 நிமிடங்களில் முழுவதும் சார்ஜ் ஏறும் தன்மை கொண்டது. 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் கொண்டது. 6.67-இன்ச் full-HD+ AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200nits பிரைட்னஸ், MediaTek Dimensity 920 SoC பிராசஸர் கொண்டது. இதன் விலை ரூ.26,999 ஆகும்.
-
ரியல்மி 9ஐ- 6.6-inch full-HD+ டிஸ்பிளே, 90Hz பீக் ரெஃப்ரெஷ் ரேட், Qualcomm Snapdragon 680 SoC பிராசஸர், ஸ்டிரியோ ஸ்பீக்கர், 33W சார்ஜிங். இதன் 4ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.13,999 மற்றும் 6 ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.15,999-ஆகும்.