பவானிசாகர் அணை கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவில் நீடித்து வரும் நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் பாசனத்திற்கு திறக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் அமைந்துள்ள பவானிசாகர் அணை 105அடி உயரத்தையும் 32.8டி.எம்.சி கொள்ளளவையும் கொண்டுள்ளது .அணையின் நீர் பிடித்த பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் கடந்த மதம் நவம்பர் 8ஆம் தேதி முழு கொள்ளளவை பவானிசாகர் அணையில் இருந்து உபரி திறக்கப்பட்டு வருகிறது .இன்று கால நிலவரப்படி அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 3102அடியாக உள்ளது பவானி ஆற்றில் 1000கன அடியும் கீழ் பவானி அணையில் 2100கன அடி என மொத்தம் 3100கன அளவு உபரி நீர் வெளியேற்றப் படுகிறது .ஜனவரி முதல் வாரத்தில் நெல் சாகுபடிக்கு நீர் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் .