Categories
மாநில செய்திகள்

கடந்த ஒரு வார ஊரடங்கினால்…. பாதிப்பு குறைந்து வருகிறது – முதல்வர் மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் 24ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தளர்வுகளற்ற ஊரடஙகை அமல்படுத்தியுள்ளது. இதில் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டன.

இந்நிலையில் தற்போது மீண்டும் தளர்வு அல்லாத முழு ஊரடங்கை ஜூன்-7 வரை அமல்படுத்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு கணிசமான அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்கள் தேவை இல்லாமல் வெளியே சுற்றக் கூடாது என்றும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கடந்த ஒரு வார காலமாக ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருகிறது என்று முதலவர் தெரிவித்துள்ளார்

Categories

Tech |