கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் மொத்தம் 35 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சூப்பிரண்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் காவல் துறையினரின் சார்பில் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு குற்றத்தடுப்பு, சட்டமன்ற தேர்தல் பணி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். அதனடிப்படையில் 2021-ஆம் ஆண்டு கொலை, கொள்ளை, மது, கஞ்சா கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டில் சுமார் 71 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து 2021-ல் மாவட்டத்தில் 35 கொலைகளும், 203 பேர் சாலை மற்றும் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்டுள்ளார். மேலும் இனிவரும் காலங்களில் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, விபத்து, கடத்தல் போன்ற சம்பவங்களை தடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.