Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடந்த மாதம் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர்…. நிதி வழங்கி ஆறுதல் கூறிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!!!

உயிரிழந்த போலீஸ்காரர்  குடும்பத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு போலீஸ் துறையில் 2-ஆம்  நிலை போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். தற்போது பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்று நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.  கடந்த மார்ச் மாதம் 30-ஆம் தேதி முருகேசன் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனால் அவருடன் பணியாற்றிய சக காவல்துறையினர் ஒன்று சேர்ந்து 7 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டினர். இதனையடுத்து நேற்று  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து இந்த நிதியை அவரின்  குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  ரவளிப்பிரியா முருகேசனின் குடும்பத்தினரிடம் 7  லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்கி ஆறுதல் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது. கடந்த 1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் 3 ஆயிரத்து 500 பேர் 2-ஆம்  நிலை போலீஸ்காரராக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் தற்போது பணி புரிந்து வருகின்றனர். இவர்களிடம்  ஒருங்கிணைந்து காக்கும் கரங்கள் என்ற வாட்ஸ்அப் குழு மூலம் இதுவரை 2 கோடியை 86 லட்ச ரூபாய்  வரை   நிதி திரட்டப்பட்டு 50 போலீஸ்காரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |