ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இரண்டு நாள் பயணமாக உத்திரபிரதேசம் சென்று இருக்கின்றார். பிஜ்னோரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ரயில் பயணிகளுக்கு 55 சதவிகித கடன் சலுகை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசும்போது ரயில்வேக்கு நூறு ரூபாய் செலவாகிறது என்றால் வெறும் 45 ரூபாய் மட்டுமே பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படுகின்றது. இது கடந்த வருடம் மட்டும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகைக்காக மத்திய அரசு 62,000 கோடி செலவிட்டு இருக்கிறது என கூறியுள்ளார்.
மேலும் புதிய ரயில் திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் மின்சார ரயில்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அவை என்ஜின் இல்லாமல் இரண்டாவது அல்லது மூன்றாவது பெட்டியில் இருந்து இயக்கப்படும் வகையில் உருவாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தொலைதொடர்பு துறையும் வகித்துவரும் அஸ்வினி வைஷ்ணவ் அக்டோபர் முதல் பி எஸ் என் எல்லில் 5g சேவை தொடங்கப்படுவதாகவும் அடுத்த 500 நாட்களில் 5 பெரிய நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.