Categories
அரசியல் மாநில செய்திகள்

கடந்த 10 ஆண்டுகளில்…. 6.85 லட்சம் கோடி மதிப்பில் புதிய முதலீடுகள் – முதல்வர் பெருமிதம்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து முதல்வர் பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். மேலும் தேர்தல் பரப்புரையின் போது மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகின்றார்.

இந்நிலையில் பேசிய அவர், “தொழிற்சாலைகள், தொழிற்சாலைப் பணியாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது என்றும், TNGIM-2015, TNGIM-2019 கையெழுத்தான ஒப்பந்தங்களில் 81% பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் 6.85 லட்சம் கோடி  அளவிற்கான புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |