ஹாசன் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து கணக்காளர் உடல்நலக்குறைவால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் மாவட்டம் போளூர் தாலுகா பைராபுரா அதை சேர்ந்தவர் பசவராஜ், 45 வயதான இவர் கிராம பஞ்சாயத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து, உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பசவராஜ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று இரவு கடும் இருமலால் அவதிப்பட்டு வந்த பசவராஜ், இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க செல்வதாக கூறி தன் அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டு உள்ளார். பின்னர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி போளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் அங்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்யும்போது அவரது சட்டைப்பையில் இருந்து கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில் பத்து நாட்களுக்கும் மேலாக கடும் காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வருவதாகவும், இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் பசவராஜ் எழுதியுள்ளார். மேலும், தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.