Categories
மதுரை மாநில செய்திகள்

கடந்த 13 ஆண்டுகளில் காணாமல்போன மீனவர்கள் எத்தனை பேர்? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. பொதுவாக கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தாலும் அவர்களை விரட்டுவதில் அதிக கடுமையான முறையை பின்பற்றுகிறது இலங்கை கடற்படை.

அதே போன்று சில சமயங்களில் வலைகளை அறுத்தல் மற்றும் படகுகளை குறிவைத்தும், மீனவர்களை குறி வைத்தும் துப்பாக்கிச்சூடு நடத்துவதையும் தொடர்ந்து ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மாயமாவது தொடர்கதையாகவே உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2005ம் ஆண்டு காணாமல்போன கணவரின் இறப்பு சான்றிதழ் கோரி மல்லிகா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இறப்பு சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை மறுப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 13 ஆண்டுகளில் காணாமல்போன மீனவர்கள் எத்தனை பேர்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் காணாமல் போன மீனவர்கள் தொடர்பான மனுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |