Categories
மாநில செய்திகள் வானிலை

கடந்த 130 வருட வானிலை வரலாற்றில் முதல் முறையாக…. தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தகவல்…..!!!!!!

தெற்கு வங்கக் கடலின் மத்தியபகுதி மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி இன்று (மார்ச்.3) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழகம் கடற்கரை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 130 வருடம் வானிலை வரலாற்றின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் தமிழகத்தை நெருங்கும் முதல் காற்றழுத்தம் தாழ்வு மண்டலம் இதுதான் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 1938ஆம் ஆண்டு இலங்கையையும், 1994 ஆம் ஆண்டு அந்தமானிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மாதத்தில் நெருங்கி உள்ளன.

வானிலை வரலாற்றிலேயே முதன் முறையாக மார்ச் மாதத்தில் தமிழநாட்டை நெருங்கும் முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இது தான் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரையிலும் இருக்கக்கூடிய கடந்த 130 ஆண்டு வானிலை வரலாற்றின் அடிப்படையில் தமிழகத்தை மார்ச் மாதம் நெருங்கும் முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |