தேனியில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்திலிருக்கும் லோயர்கேம்பிலிருந்து கூடலூர் நகராட்சிக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கூடலூர் நகராட்சிக்கு வரும் நீரின் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் அப்பகுதியிலிருக்கும் பல்வேறு இடங்களுக்கு கடந்த 15 தினங்களாக தண்ணீர் வினியோகம் செய்யாமல் இருக்கிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் குடி தண்ணீருக்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் கூடலூரின் வடக்கு ரத வீதியிலிருக்கும் பெண்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தண்ணீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.