கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு 1,800 கிலோ தங்கம், 4800 கிலோ வெள்ளி, 2000 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய வருவாய் ஈட்டும் கோவில்களில் ஒன்று காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயில். இந்த கோயிலில் கடந்த 20 ஆண்டுகளில் கிடைத்துள்ள நன்கொடை குறித்து சமூக செயற்பாட்டாளர் ஹேமந்த் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் அந்த கோயிலில் 1,800 கிலோ தங்கம், 4800 கிலோ வெள்ளி, 2 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக கோயிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை 17 லட்சமாக குறைந்தது. 2011 மற்றும் 2012 ஆகிய காலங்களில் தான் பக்தர்களின் வரத்து அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.