கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2,624 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று குறைந்த பாடு இல்லை. மேலும் இந்தியாவில் உயிர் பலிகளும் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2,19,838 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் ஒரே நாளில் 2,624 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு நிலவரம் 1,66,10,481 ஆக அதிகரித்து உள்ளது.