கடந்த 5 வருடங்களில் எரிவாயு சிலிண்டர்களின் விலை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோலிய அமைச்சகம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 5 வருடங்களில் எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உயர்ந்துள்ளது. அதாவது 5 வருடங்களில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எரிவாயு சிலிண்டரின் விலை 723 ரூபாய் ஆக இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டின் ஜூலை மாதத்தில் 1053 ரூபாயாக இருக்கிறது.
கிட்டத்தட்ட 45 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. அதாவது 723 ரூபாய் இருந்த சிலிண்டர் விலை 330 ரூபாய் உயர்ந்து 1053 ரூபாயாக இருக்கிறது. கடந்த 5 வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட 58 முறை சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் பலமுறை அதிகரித்துள்ளது. மேலும் எரிவாயு சிலிண்டர் விலையின் அதிகரிப்பு பண வீக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.