கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பென்சப்பள்ளி கிராமத்தில் டிரைவரான சந்தோஷ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூர் காரப்பள்ளி பகுதியில் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 6 மாதமாக சந்தோஷ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.