கடன் பிரச்சனையால் மனமுடைந்த தறி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஜோடர்பாளையம் சவுடேஸ்வரி நகரில் வசித்து வந்த தனசேகரன் என்பவர் தறி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் தறி பட்டறையில் வேலை பார்த்து வந்த நிலையில் கடன் பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தனசேகரன் தறி பட்டறையில் வைத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேலகவுண்டம்பட்டி போலீசார் தனசேகரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.