கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் மின் வியாபாரியான பூக்குஞ்சு(40) என்பவர் வசித்து வருகிறார். மிகவும் வறுமையில் இருக்கும் அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கார்ப்பரேஷன் வங்கியில் இருந்து வீட்டு கட்டுவதற்காக ரூ.7.45 லட்சம் கடன் பெற்றுள்ளார். ஆனால் அவரால் கடன் தொகை திரும்ப செலுத்த இயலவில்லை. இதனால் அவர் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்ந்து ரூ.12 லட்சமாக உயர்ந்தது.
இதனையடுத்து கடனை திருப்பி செலுத்தா விட்டால் வீடு ஜப்தி செய்யப்படும் என்று வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் லாட்டரி ரூபத்தில் அவருக்கு ரூ.70 லட்சம் கிடைத்தது. பூங்குஞ்சு எப்பொழுதாவது லாட்டரி சீட்டு வாங்குவார். அப்படி வாங்கிய லாட்டரி சீட்டு அவருக்கு கை கொடுத்திருக்கிறது. வீடு பறிபோகும் நிலையில் இருந்தவருக்கு லாட்டரி சீட்டு அவரை காப்பாற்றி இருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.