Categories
உலக செய்திகள்

“கடனுதவி வழங்க சர்வதேச நிதியும் ஒப்புதல்”… இன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!!

இலங்கைக்கு கடனது வழங்குவது பற்றி சர்வதேச நிதியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை சர்வதேச நிதியதிடம் அவசர கடனு உதவியாக 5 பில்லியன் டாலர் கோரியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்து அந்த நாட்டு அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த மாதம் 24 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் சமீபத்தில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்த பேச்சு வார்த்தை நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால் பேச்சுவார்த்தை கூடுதலாக ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை வந்து சேர்ந்த சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அரசுடனான பேச்சுவார்த்தையை இன்று முடித்து வைத்து இலங்கைக்கு கடனுதவி வழங்குவது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Categories

Tech |