தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகைக்கான தவளை மற்றும் வட்டித் தொகையை திரும்ப செலுத்துவதற்கு ஒரு நுன்கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாயப்படுத்த கூடாது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடனை திரும்ப செலுத்த போதுமான அவகாசம் தரவேண்டும் என கூறியுள்ளார்.