புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடுத்த கடனை திருப்பித் தராததால் ஆத்திரமடைந்து கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராயவரம் வாசுகிபுரம் பகுதியில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் சந்தோஷ்குமார் அப்பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் மற்றும் கணேசன் இருவரும் ஒன்று சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது கொடுத்த கடனை திருப்பி தருமாறு கணேசனிடம் சந்தோஷ்குமார் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணேசனை குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கணேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து காவல்துறையினர் சந்தோஷ் குமாரை கைது செய்து கொலை செய்ததற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.