Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடன் செயலியில் கடன் பெற்ற வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில்  பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது  குடும்ப செலவுக்காக கடன் செயலி மூலம் 5 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால்  பாண்டியன் 1,500 ரூபாய் மட்டும்  பாக்கி வைத்துள்ளார். இதனையடுத்து பாண்டியனின் செல்போனிற்கு  உடனடியாக மீதி பணத்தை செலுத்துமாறு குறுஞ்செய்தி ஒன்று  வந்துள்ளது. ஆனால் பாண்டியனால் பணத்தை   செலுத்த முடியவில்லை.

இந்நிலையில்   பாண்டியனின் புகைப்படத்தை பாலியல் தொழிலுக்கு அழைப்பது போன்று சித்தரித்து அவரது செல்போனிற்கு  அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டியன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது  குடும்பத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாண்டியனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |