Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடன் செலுத்திய பிறகும் பணம் வசூலித்த பிரபல நிதி நிறுவனம்”…..20,000 அபராதம்…. நுகர்வோர் கோர்ட் அதிரடி….!!!!!!!!

கடன் செலுத்திய பின் பணம் வசூலித்த பிரபல நிதி நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட் 20000 அபராதம் விதித்துள்ளது.

நாகர்கோவில் சற்குண வீதி திருவள்ளுவர் நகர் என்னும் பகுதியைச் சேர்ந்த ஞானராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2007 ஆம் வருடம் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல நிதி நிறுவனத்தில் 3,50,000 கடன் உதவி பெற்று ஒரு நான்கு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். இந்த நிலையில் இந்த கடன் தொகையை 2009 ஆம் வருடம் வட்டியுடன் நிதி நிறுவனத்திற்கு செலுத்தி தடையில்லா சான்று பெற்றுள்ளார். இந்த சூழலில் 2019 ஆம் வருடம் அத்தியாவசிய தேவைக்காக வேறொரு நிதி நிறுவனத்தில் கடன் உதவி கேட்டு அவர் விண்ணப்பித்திருந்தார். அப்போது ஞான ராஜன் மற்றும் அவரது மனைவி பெயரில் சிபில் ரிப்போர்ட் இருப்பதாக கூறி கடனுதவி வழங்க மறுத்துவிட்டது.

அதாவது இதற்கு முன் 2007 ஆம் வருடம் வாங்கிய கடனை நிதி நிறுவனத்தில் முழுமையாக செலுத்தாமல் 1660 பாக்கி இருப்பதாக கூறியுள்ளது. இருந்த போதிலும்  ஞானராஜனுக்கு உடனே பணம் தேவைப்பட்டதனால் வேறு வழி இல்லாமல் ஏற்கனவே கடன் வாங்கிய நிதி நிறுவனத்திடம் 1660 செலுத்தியுள்ளார். ஆனாலும் சிபில் ரிப்போர்ட்டில் இருந்து ஞானராஜன் மற்றும் அவரது மனைவி பெயர் நீக்கம் செய்யப்படவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஞானராஜன் குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர்  போன்றோர்  சேவை குறைப்பாட்டை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட பிரபல நிதி நிறுவனத்திற்கு ரூபாய் 20,000 அபராதம் விதித்துள்ளனர். மேலும் ஞான ராஜனுக்கு கொடுத்த ரூபாய் 1660 திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் வழக்கு செலவு ரூபாய் 5000 போன்றவற்றை நான்கு வார காலத்திற்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |